வீடுகள் முன் ஓடும் சாக்கடை
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் வீடுகள் முன் ஓடும் சாக்கடையால் மக்கள் அவதிப்படுகின்றனர்.இப்பேரூராட்சியில் 8வது வார்டுக்குட்பட்ட வேட்டையன்பட்டி பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் சில தெருக்களில் வீடுகள் முன்பாக கழிவு நீர் ஓடுகிறது.நடுநிலைப் பள்ளி அருகே கழிவுநீர் தேங்குவதால் மாணவர்கள் தொற்று நோய்க்கு ஆளாகும் ஆபத்து உள்ளது.