உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை அரசு மருத்துவமனையில் மகப்பேறு டாக்டர்கள் பற்றாக்குறை

சிவகங்கை அரசு மருத்துவமனையில் மகப்பேறு டாக்டர்கள் பற்றாக்குறை

சிவகங்கை : மாவட்ட அளவில் அரசு மருத்துவ மனைகளில் மகப்பேறு டாக்டர்கள் பற்றாக்குறையை போக்கி, கர்ப்பிணிகளுக்கு தடையின்றி பிரசவம் நடக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாவட்ட அளவில்19 அரசு மருத்துவமனை, 49 ஆரம்ப சுகாதார நிலையம், 277 துணை சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்குள்ள மகப்பேறுபிரிவுகளில் டாக்டர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. குறிப்பாக திருப்புவனத்தில் 4 டாக்டர் இருக்க வேண்டிய நிலையில் ஒருவர் மட்டுமே உள்ளார். தேவகோட்டையில் இருந்த ஒரு டாக்டரும் மாறுதலாகி சென்றுவிட்டார்.திருப்புத்துார், காரைக்குடியில் மகப்பேறு டாக்டர்களே இல்லை. இதனால், மாவட்ட அளவில் கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரிக்கு தான் வரவேண்டியுள்ளது. கர்ப்பிணிகளின் நலன் கருதி அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு டாக்டர்கள் பற்றாக்குறையை போக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை