உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை-மலம்பட்டி 4 வழிச்சாலை பணி  மூன்று இடங்களில் ரவுண்டானா

சிவகங்கை-மலம்பட்டி 4 வழிச்சாலை பணி  மூன்று இடங்களில் ரவுண்டானா

சிவகங்கை: சிவகங்கை-மலம்பட்டி வரை ரூ.78 கோடி செலவில் நடக்கும் நான்கு வழி சாலை பணியில் 3 இடங்களில் ரவுண்டானா, 9 இடங்களில் இணைப்பு சாலை அமைக்கப்பட உள்ளது.ராமநாதபுரம்-சிவகங்கை--மேலுார் தேசிய நெடுஞ்சாலையில், இரு வழிச்சாலையாக இருந்த சிவகங்கை-மலம்பட்டி வரையிலான 11.5 கி.மீ., ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் அமலுக்கு வந்தது. முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இந்த ரோட்டினை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளது. முக்கிய நகரங்களை இணைக்கும் நான்கு ரோடு சந்திப்பில் ரவுண்டானா அமைக்கவும் திட்டமிட்டுள்ளனர்.சிவகங்கை-மேலுார் ரோட்டை இணைக்கும் இடத்தில் ஒரு ரவுண்டானா, இடையமேலுார், மலம்பட்டி வாழை கமிஷன் மண்டி அருகே என 3 இடங்களில் ரவுண்டானா அமைக்க உள்ளனர். இது தவிர 11.5 கி.மீ., துாரத்தில் சிறு சிறு கிராமங்களுக்கு செல்லும் 9 சந்திப்பு ரோடுகளை, 4 வழிச்சாலையில் இருந்து கிராமங்களுக்கு எளிதில் செல்லும் விதத்தில், சந்திப்பு ரோடுகளை மேம்படுத்த உள்ளனர். இந்த ரோடு பயன்பாட்டிற்கு வந்த பின், ராமநாதபுரத்தில் இருந்து சிவகங்கை வழியாக மதுரை செல்வதற்கு ஏற்ற ரோடாக மாற்றி அமைக்கப்பட்டு வருகின்றன. கிராமப்புற பகுதிகளானசக்கந்தி, கோமாளிபட்டி, இடையமேலுார், சாலுார், கண்டாங்கிபட்டி, மலம்பட்டி வரையிலான கிராமப்பகுதிகளுக்கு வாகனங்கள் தடையின்றி சென்றுவர ஏதுவாக அமைந்திருக்கும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி