உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / படிப்பு வட்டம் கூடுதல் நேரம் திறப்பு;  பட்டதாரிகள் கோரிக்கை

படிப்பு வட்டம் கூடுதல் நேரம் திறப்பு;  பட்டதாரிகள் கோரிக்கை

சிவகங்கை : சிவகங்கை நகராட்சி சார்பில் மருதுபாண்டியர் நகர் குடியிருப்பு பகுதியில் நவீன படிப்பகம் திறக்கப்பட்டது. இங்குள்ள பொது அறிவு, பிற புத்தகங்களை எடுத்து போட்டி தேர்வுக்கு தயாராக பட்டதாரிகளுக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. தினமும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், படிக்க ஏதுவாக படிப்பு மையம் திறக்கப்பட்டது. இந்த படிப்பு மையம் மூலம் டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளை எழுத உள்ள பட்டதாரிகள் பயன் அடைந்து வருகின்றனர். தேர்வு நடக்க உள்ள நிலையில், இந்த ஒரு மாதத்திற்கு மட்டும் படிப்பு மையத்தை காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை திறந்து வைக்க, நகராட்சிக்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி போட்டி தேர்வுக்கு தயாராகும் பட்டதாரிகள் கலெக்டர்ஆஷா அஜித்திடம் கோரிக்கை வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை