| ADDED : மே 04, 2024 05:24 AM
சிவகங்கை: கோடை வெயிலால் உடலில் நீர்சத்து குறையாமல் இருக்க, நீர்சத்துள்ள பழங்கள், தண்ணீர் குடிக்க வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: அக்னி நட்சத்திர வெயில் துவங்க உள்ளது.கோடை வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள தேவையற்ற பயணத்தை தவிர்க்கவும். தினமும் காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும். தாகம் ஏற்படாவிட்டாலும்,உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தேவையான அளவு தண்ணீரும், நீர்சத்துள்ள பழங்களும் எடுக்க வேண்டும். விவசாயிகள் அதிகாலை, மாலையில் தங்களது விவசாய பணிகளை மாற்றி அமைத்து கொள்ள வேண்டும். துரித மற்றும் கார உணவுகளை தவிர்க்கவும். வெளியே செல்லும் போது கருப்பு கண்ணாடி அணிந்தும்,உடலில் சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்த வேண்டும். இது போன்று தற்காப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.