உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தக்கை பூண்டு உர விதை வழங்கல்

தக்கை பூண்டு உர விதை வழங்கல்

தேவகோட்டை : வேளாண் துறை சார்பில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் பற்றி தேவகோட்டை அருகே தளக்காவயலில் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கினர். ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன் தலைமை வகித்தார். சிவகங்கை வேளாண்மை இணை இயக்குநர் பொறுப்பு லட்சுமி பிரபா கிராமத்தில் கோடை விவசாயம் செய்திருந்த பயிர்களை பார்வையிட்டு ஒரு ஏக்கருக்கு 20 கிலோ தக்கைப் பூண்டு விதை மானியத்தில் வழங்குவது பற்றி விளக்கினார். வேளாண் துறை உதவி இயக்குநர் காளிமுத்து, விவசாய ஆலோசகர் சீனிராஜன், துணை வேளாண் அலுவலர் முத்தையா, உதவி வேளாண் அலுவலர்கள் தியாகராஜன், அபிராமி, மரிய ஜுலியட் மேரி, அட்மா அலுவலர்கள் தமிழ்ச்செல்வி எஸ்தர், குருதாஸ், அர்ச்சனா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்