உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தமிழக வாத்து, முட்டைகள் கேரளாவில் சக்கைப்போடு

தமிழக வாத்து, முட்டைகள் கேரளாவில் சக்கைப்போடு

திருப்புவனம்:தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு இறைச்சிக்காக வாத்துகள் அனுப்பப்பட்டு வரும் நிலையில், அதன் விலை உயர்ந்துஉள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், பூவந்தி, கலியாந்துார் உள்ளிட்ட கிராமங்களில் முட்டைக்காகவும், இறைச்சிக்காகவும் வாத்துகள் வளர்க்கப்படுகின்றன. ஒரு வாத்து, 140 முட்டைகள் வரை இடும்.கோடைக்காலத்தில் முட்டை உற்பத்தி வெகுவாகக் குறையும். 1,000 வாத்துகளில் 500 வாத்துகள் மட்டுமே முட்டையிடும். கேரளாவில் இருந்து வியாபாரிகள் வாரந்தோறும், 50,000 முட்டை, வாத்துகளை திருப்புவனம் வட்டாரத்தில் வாங்கிச் செல்கின்றனர். கடந்த மாதம் வரை, 7.50 ரூபாய் என விலை கிடைத்த முட்டை, தற்போது, 9.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை