கோயில் கும்பாபிஷேகம் ..
தேவகோட்டை : தேவகோட்டை அருகே மருதவயல் செல்வ முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ரவிக்குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள்இரண்டு கால யாக சாலை பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி பூஜை நடத்தினர். செல்வ விநாயகர், வெற்றி வேலவன், செல்வ முத்து மாரியம்மன், மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. மருதவயல் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.