உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பா.ஜ., நிர்வாகி கொலை க்கு ஆயுதம் கொடுத்தவர் கைது

பா.ஜ., நிர்வாகி கொலை க்கு ஆயுதம் கொடுத்தவர் கைது

சிவகங்கை:சிவகங்கையில் பா.ஜ., நிர்வாகி செல்வகுமார் கொலையில் ஆயுதம் கொடுத்தவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை வேலாங்குளம் செல்வக்குமார் 52. இவர் பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக பதவி வகித்தார். ஜூலை 27 இரவு டூவீலரில் வேலாங்குளத்திற்கு சென்ற போது கும்பல் ஒன்று அவரை மறித்து வெட்டியதில் இறந்தார். போலீசார் மேலப்பிடாவூர் அரியசாமி மகன் மருதுபாண்டி 20, சாத்தரசன்கோட்டை மனோகரன் மகன் அருண்குமார் 20, வைரம்பட்டி பண்ணைக்கருப்பையா மகன் வசந்தகுமார் 25, புதுப்பட்டி உதயநாதன் மகன் சதீஸ் 21, எம்.ஜி.ஆர்., காலனி கண்ணன் மகன் விஷால் 20. ஆகியோரை கைது செய்தனர். இந்நிலையில் செல்வக்குமார் கொலைக்கு ஆயுதம் கொடுத்து உதவியதாக மேலப்பிடாவூர் சுரேஷ் மகன் அங்குச்சாமி என்ற ஆகாஷ் 19 என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை