உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை வாரச்சந்தையில் தக்காளி, வெங்காயம் விலை சரிவு

மானாமதுரை வாரச்சந்தையில் தக்காளி, வெங்காயம் விலை சரிவு

மானாமதுரை; மானாமதுரை வாரச்சந்தையில் பச்சை மொச்சை விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.150க்கும், தக்காளி ரூ.30க்கும்,சின்ன வெங்காயம் ரூ.40க்கும் விற்பனை செய்யப்பட்டது.மானாமதுரையில் வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் சந்தையில் பல்வேறு ஊர்களிலிருந்து 400க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக விலை உயர்ந்து காணப்பட்ட காய்கறி விலை இந்த வாரம் சற்று குறைந்து விற்பனை செய்யப்பட்டது.தக்காளி 1கிலோ ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.40,பல்லாரி வெங்காயம் ரூ.60 விற்கப்பட்டது. கடந்த வாரம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்ட பட்டர் பீன்ஸ்,சோயா பீன்ஸ் இந்த வாரம் ஒரு கிலோ ரூ. 180, சின்ன பாகற்காய் ரூ.180, உருளைக்கிழங்கு ரூ.80,கத்தரிக்காய் ரூ.60, பீட்ரூட்,கேரட் ரூ.80,அவரை ரூ.80, பச்சை மிளகாய் ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது. பச்சை மொச்சை இந்த வாரம் கிலோ ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை