உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துார் சந்திப்பில் போக்குவரத்து நெருக்கடி

திருப்புத்துார் சந்திப்பில் போக்குவரத்து நெருக்கடி

திருப்புத்துார் : திருப்புத்துார்-மதுரை ரோட்டில் வாணியன் கோயில் ரோடு சந்திப்பில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க போக்குவரத்து போலீசார் நியமிக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.நகரில் வணிக நிறுவனங்கள், வங்கிகள் நிறைந்த முதன்மையான ரோடாக மதுரை ரோடு உள்ளது. இந்த ரோட்டில்இருந்து தெருக்களுக்கு பல ரோடுகள் பிரிகின்றன.குறிப்பாக சமஸ்கான் பள்ளிவாசல் ரோடு மற்றும்வாணியன் கோயில் ரோடும் பிரிகின்றன. நேருக்கு நேர் பிரிவதால், அப்பகுதி நான்கு ரோடு சந்திப்பாக மாறி விட்டது. தற்போது அதிகமாக டூ வீலர்கள், கார்கள், சரக்கு வேன்கள், ஆட்டோக்களில் செல்பவர்கள் இந்த நான்கு ரோட்டை பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த சந்திப்பில் வாகனங்கள் அதிகளவில் மோதக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. பாதசாரிகள் கடந்து செல்லவும் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் அறிவிப்பு பலகையும் இல்லை. இதனால் விபத்து அபாயம்அதிகமாக காணப்படுகிறது. போக்குவரத்து போலீசாரை இந்த சந்திப்பில் நியமிக்க இப்பகுதியினர் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்