| ADDED : ஜூலை 12, 2024 04:31 AM
சிவகங்கை: காளையார்கோவிலில் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பஸ் ஸ்டாண்டை இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ், காளையார்கோவில் ஊராட்சி செயல்படுகிறது. இந்நகரில் 12 வார்டுகளின் கீழ் 29,850 பேர் வசிக்கின்றனர். ஆண்டுக்கு ரூ.60 லட்சம் வீதம் வருவாய் கிடைக்கிறது. இங்கு அரசு, தனியார் பள்ளிகள் என 9க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்குகிறது. இது தவிர திருச்சி-பரமக்குடி மாநில நெடுஞ்சாலையில் உள்ளதால், 24 மணி நேரமும் காரைக்குடி-பரமக்குடி இடையே பஸ் போக்குவரத்து அதிகரித்து காணப்படுகின்றன. ஊராட்சி ஒன்றிய, தாலுகா தலைநகராக இருப்பதால்இங்கு வந்து செல்வோர்அதிகம். இது தவிர மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால், அதிக வாகன போக்குவரத்து உள்ள நகராக இருக்கிறது. இச்சிறப்பு பெற்ற ஆன்மிக சுற்றுலா தலமான காளையார்கோவிலில் உள்ள பஸ் ஸ்டாண்ட் சிறிய இடத்தில் அமைந்துஉள்ளதால், பஸ்கள் உள்ளே சென்று வருவதற்குள் சிக்கலில் சிக்கி தவிக்கிறது.மதுரை-தொண்டி ரோட்டில் பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயிலை ஆக்கிரமித்து வாகனங்கள் மற்றும் கடைகள் வைத்துள்ளதால், பஸ்கள் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. பெரும்பாலான பஸ்கள் மதுரை-தொண்டி மெயின் ரோட்டிலேயே நிறுத்திவிடுவதால், பிற வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு நெருக்கடி அதிகரித்து காணப்படுகிறது. எனவே பேரூராட்சி தர உயர்வு காத்திருக்கும்காளையார்கோவிலின் வளர்ச்சிக்கு மாற்று இடத்தில் புதிதாக பஸ் ஸ்டாண்ட் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காளையார்கோவில் பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.