உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அனுமதியில்லாத மஞ்சுவிரட்டு

அனுமதியில்லாத மஞ்சுவிரட்டு

திருக்கோஷ்டியூர்: சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த மதியாத கண்ட விநாயகர், அழகு சவுந்தரியம்மன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா 10ம் நாளை முன்னிட்டு காலையில் மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கம். ஆனால் தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளதால் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இதனால் பராம்பரியமாக காலை 10:50 மணி அளவில் தொழுவிலிருந்து கோயில் காளை அவிழ்க்கப்பட்டது. இருப்பினும் நுாற்றுக்கணக்கான மாடுகள் மஞ்சுவிரட்டு திடலுக்கு வெளியே கட்டு மாடுகளாக அவிழ்க்கப்பட்டன. இதில் சிலர் காயமடைந்தனர். அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடந்ததால், திருக்கோஷ்டியூர் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ