உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் மாடுகளுக்கு தடுப்பூசி

சிவகங்கையில் மாடுகளுக்கு தடுப்பூசி

சிவகங்கை : சிவகங்கை அருகே பிரவலுாரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார். கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் ராமசந்திரன் வரவேற்றார். துணை இயக்குனர் சபாபதி, உதவி இயக்குனர்கள் ராம்குமார், ஜெயப்பிரகாஷ், பிரவலுார் ஊராட்சி தலைவர் கவிதா பங்கேற்றனர். முகாமில் 300 மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. மாவட்ட அளவில் 70 கால்நடை மருத்துவ குழுக்கள் அமைத்து, 2,11,300 மாடுகளுக்கு இத்தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளனர். இம்முகாம் தொடர்ந்து 21 நாட்கள் நடைபெறும். அதற்கு பின் விடுபட்ட மாடுகளுக்கு ஜூலை 1 முதல் 10 வரை தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ