உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பி.இ., முடித்தோருக்கு தொழில் பழகுனர் பயிற்சி: கலெக்டர் தகவல்

பி.இ., முடித்தோருக்கு தொழில் பழகுனர் பயிற்சி: கலெக்டர் தகவல்

சிவகங்கை : அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மற்றும் தொழில் பழகுனர் பயிற்சி வாரியம் சார்பில் ஒரு ஆண்டு தொழிற்பயிற்சி பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இத்தொழிற்பயிற்சி பெற 2020 முதல் 2023ம் ஆண்டு வரை பி.இ., பட்டம், பட்டய படிப்பில் (இயந்திரவியல், தானியியங்கிவியல்) மற்றும் பி.இ., அல்லாத கலை அறிவியல், வணிகம் ஆகிய பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற தகுதி உடைய மாணவர்கள் ஜூலை 8ம் தேதிக்குள் www.boat-srp.comஇணையதள முகவரியின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பித்து ஒரு ஆண்டு தொழிற்பயிற்சி பெற்று பயன்பெறலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை