உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வி.ஏ.ஓ., அலுவலகத்தில் தண்ணீர் தப்பியது ஆவணங்கள்

வி.ஏ.ஓ., அலுவலகத்தில் தண்ணீர் தப்பியது ஆவணங்கள்

திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையால் நெல்முடிக்கரை வி.ஏ.ஓ., அலுவலகத்தில் மழை நீர் புகுந்தது.திருப்புவனத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாலையில் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக கண்மாய், ஊரணி உள்ளிட்டவை நிரம்பி வருகின்றன. வைகை ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்த மழை காரணமாக ஆற்றிலும் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் தற்போது பிரமனுார் கால்வாயில் அதிகப்படியான தண்ணீர் செல்கிறது.நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு தொடங்கிய மழை 7:00 மணி வரை நீடித்தது. வீதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக நெல்முடிக்கரை வி.ஏ.ஓ., அலுவலகத்தினுள் மழை நீர் புகுந்தது. ஊழியர்கள் ஆவணங்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். திருப்புவனத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 80.40 மி.மீ., மழை அளவு பதிவாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை