மேலும் செய்திகள்
பாரதி வீதியில் பாரபட்சமாக ஆக்கிரமிப்பு அகற்றம்
20-Feb-2025
தேவகோட்டை: தேவகோட்டை நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது. கமிஷனர் தாமரை முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் நடந்த விவாதம்:ரமேஷ், து.தலைவர்: தெருவை சுத்தம் செய்ய தேவையான விளக்குமாறு ரூ.600 என டெண்டர் வந்துள்ளது. விலை அதிகமாக உள்ளது. விசாரித்து வாங்க வேண்டும். பள்ளிகள் அருகே குப்பை கொட்டி விடுகின்றனர். குப்பை கொட்டுபவர்களை கண்டுபிடித்து அபராதம் விதிக்க வேண்டும்.அய்யப்பன்: தேவகோட்டை சுதந்திர போராட்ட நகர். தேவகோட்டை நுழைவு வாயிலில் தியாகிகள் தோரண வாயில் கட்ட வேண்டும்.அனிதா: பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் எந்த நிலையில் உள்ளது. அறிவுசார் மையம் அமைக்க வேண்டும். சுதா: மெயின் ரோட்டில் ஆக்கிரமிப்பை அகற்றுவது போல் நகரில் அனைத்து பகுதியிலும் ஆக்கிரமிப்பை அகற்றினால் அரசு இடம் கிடைக்கும். பலருடைய காம்பவுண்ட் சுவர் அரசு இடத்தில் தான் கட்டியுள்ளனர்.தலைவர்: மழைநீர் கால்வாய் கட்ட ரூ. 8 கோடி அனுமதிக்கு அனுப்பி உள்ளோம்.பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும். பஸ் ஸ்டாண்ட் தொடர்பாக இந்தாண்டு சட்டமன்றத்தில் அறிவிப்பு வரும். தியாகிகள் தோரண வாயில் கட்ட பரிசீலிக்கப்படும். இரண்டு நாளில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட உள்ளது. அப்போது எல்லா இடங்களிலும் அகற்ற சொல்லுவோம். இவ்வாறு விவாதம் நடந்தது.
20-Feb-2025