உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சேர்ந்து வாழ மறுத்த கணவர் வீடு முன்பு 8 வயது மகளுடன் மனைவி போராட்டம்

சேர்ந்து வாழ மறுத்த கணவர் வீடு முன்பு 8 வயது மகளுடன் மனைவி போராட்டம்

காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சேர்ந்து வாழ மறுத்த கணவர் வீடு முன்பு 8 வயது மகளுடன் மனைவி போராட்டத்தில் ஈடுபட்டார்.சேலம் மாவட்டம் ஆத்துாரைச் சேர்ந்த விஜயராஜன் மகள் வினோதினி 31. இவருக்கும் காரைக்குடி சுப்ரமணியபுரம் வடக்கு 5வது தெருவைச் சேர்ந்த மெய்யப்பன் மகன் ரத்தினத்துக்கும் 41, கடந்த 2015ல் திருமணம் நடந்தது. இருவரும் சென்னையில் வசித்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ரத்தினம் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தார்.இந்நிலையில் நீதிமன்றம் இருவரையும் சேர்ந்து வாழ உத்தரவிட்டதாகவும், அந்த உத்தரவை கடைபிடிக்க மறுத்து தன்னுடன் சேர்ந்து வாழ மறுப்பதாகவும் கூறி நேற்று எட்டு வயது மகளுடன் வினோதினி ரத்தினம் வீட்டின் முன் பெற்றோருடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.அவர்களுடன் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பேசினர். பின் இரு வீட்டாரிடமும் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். மூன்று நாட்களுக்குள் ரத்தினத்தை அழைத்து வர வேண்டும் என போலீசார் உத்தரவிட்டனர். அதனையடுத்து இரு வீட்டாரும் கலைந்து சென்றனர்.வினோதினி கூறியதாவது: 2019ல் சிறிய பிரச்னையால் என்னை கணவர் குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியே அனுப்பினர். தற்போது 5 ஆண்டுகளாகிறது. கணவரை பார்க்க கூட அவரது பெற்றோர் விடவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சேர்ந்து வாழ வலியுறுத்தியும் கணவர் குடும்பத்தினர் மதிக்கவில்லை. தொடர்ந்து ஜீவனாம்சம் வழங்க வலியுறுத்தியும் அதற்கும் எந்த பதிலும் இல்லை. ஒருமுறை கூட கோர்ட்டில் கணவர் ஆஜராகவில்லை. அவரது பெற்றோர் மட்டுமே ஆஜராயினர். கணவர் இருக்கிறாரா என சந்தேகமாக உள்ளது. அவரை கண்டுபிடித்து மீட்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ