மகளிர் தின ‛வாக்கத்தான் ஓட்டம்
காரைக்குடி: காரைக்குடியில் மகளிர் தினத்தை முன்னிட்டு, மகளிருக்கானவாக்கத்தான் ஓட்ட போட்டி நடந்தது. மாநகராட்சி மேயர் முத்துத்துரை துவக்கி வைத்தார். அழகப்பா அறக்கட்டளை மேலாளர், ஊழியர்கள், அழகப்பா கல்லுாரி, பள்ளி முதல்வர்கள் பங்கேற்றனர். 'வாக்கத்தான் ஓட்டம்' உமையாள் ராமநாதன் கல்லுாரியில் தொடங்கி, அழகப்பா அருங்காட்சியகம் வழியாக மீண்டும் கல்லுாரி வந்தடைந்தது. பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம் வழங்கினர்.