சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரிகள், பல்வேறு அமைப்புகள் சார்பில் உலக யோகா தினத்தை முன்னிட்டு யோகா நடைபெற்றது.* சிவகங்கையில் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்கள் யோகாவில் ஈடுபட்டனர். முதல்வர் மனோஜ்குமார் சர்மா தலைமை வகித்தார்.நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார் சிறப்பு வகித்தார். சிவம் மார்ஷியல் ஆர்ட்ஸ் யோகா மாஸ்டர் பரமசிவம் தலைமையில் குழுவினர் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர்.* சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளியில் பள்ளி செயலர் குமரகுரு தலைமையில் மாணவர்கள் யோகாவில் ஈடுபட்டனர். மனவளக்கலை மன்ற தலைவர் சண்முகநாதன், செயலாளர் ராமநாதன் முன்னிலை வகித்தனர். மனவளக்கலை ஆசிரியர்கள் வேதாதினகரன், மகேஸ்வரன், வெற்றிவேந்தன், சீனிவாசன், காசிவைரவன், கீதா பயிற்சி அளித்தனர்.* சிவகங்கை மலர் நகரில் பா.ஜ., சார்பில் உலக யோகா தின விழா கொண்டாடப்பட்டது. அப்பகுதி சிறுவர், பெண்கள், அனைவரும் யோகா பயிற்சி மேற்கொண்டனர். பா.ஜ., மாவட்ட துணை தலைவர் சுகனேஸ்வரி தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.* சோழபுரம் ரமணவிகாஸ் மேல்நிலை பள்ளியில் பள்ளி தாளாளர் முத்துக்கண்ணன் தலைமையில் யோகா தின விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கணேஷ் வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் மற்றும் மாணவர்கள் யோகா வடிவில் நின்று தியானம் செய்தனர்.* சிவகங்கை மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தலைமையில் யோகா தின விழா நடைபெற்றது. யோகா மருத்துவ அலுவலர் தங்கம் யோகா பயிற்சி அளித்து, யோகா செய்வதின் மூலம் நன்மைகள் பெறுவது குறித்து பேசினார்.நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி இ. பக்தவச்சலு, மகிளா நீதிமன்ற நீதிபதி ஆர்.கோகுல்முருகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஏ.பசும்பொன் சண்முகையா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் எம்.பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி என்.செந்தில் முரளி, சார்பு நீதிபதி வி.சாண்டில்யன், மாஜிஸ்திரேட்கள் ஜெ.அனிதா கிறிஸ்டி, பி.செல்வம், கூடுதல் மகிளா நீதிமன்ற நீதிபதி ஜெ.ஆப்ரின் பேகம், அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் மகேந்திரன், வழக்கறிஞர் சங்க தலைவர் ஜானகிராமன், செயலாளர் சித்திரைசாமி பங்கேற்றனர்.மானாமதுரை: இளையான்குடி கோர்ட் வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவர், நீதிபதி ஹரி ராமகிருஷ்ணன் தலைமையில் கோர்ட் ஊழியர்கள்,வக்கீல்கள் அண்ணாதுரை,குமார்,ரவி,பூ முருகன், ராஜேந்திரன், சட்டப்பணிகள் குழு இளவரசன் யோகா செய்தனர். யோகா பயிற்சியாளர் அப்பாஸ் அலி பயிற்சி அளித்தார்.மானாமதுரை ஒன்றிய,நகர பா.ஜ., சார்பில் ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், நகர தலைவர் முனியசாமி (எ) நமகோடி தலைமையில் மாவட்டச் செயலாளர் சங்கரசுப்ரமணியன், ஓ.பி.சி., அணி மாவட்ட தலைவர் முருகானந்தம் முன்னிலையில் நிர்வாகிகள் கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்கு அருகில் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.காரைக்குடியில் சங்கமம் அறக்கட்டளை சேவா பாரதி சார்பில் யோகா தினம் நடந்தது. இதில், பா.ஜ., மாநில அமைப்பு குழு செயலாளர் கேசவ விநாயகம், ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜமுருகானந்தம் பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி நிர்வாகிகள், பொதுமக்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரியில் துணை முதல் விஷ்ணு பிரியா மற்றும் பேராசிரியர்கள் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். தேசிய மாணவர் படையினர் பல்வேறு யோகக் கலைகளை செய்து காட்டினர்.அமராவதி புதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லுாரியில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் செயலர் சாரதேஸ்வரி பிரியா அம்பா ராமகிருஷ்ண பிரியா அம்பா தலைமையில் முதல்வர் சிவசங்கரி ரம்யா இயக்குனர் மீனலோச்சனி முன்னிலையில் நடந்தது. வணிகவியல் துறை தலைவர் நித்திலா யோகா குறித்து பேசினார். காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் நடந்த யோகா தின நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் சேதுராமன் நிர்வாக இயக்குனர் அஜய் யுக்தேஷ், பள்ளி முதல்வர் பரமேஸ்வரி துணை முதல்வர்கள் கபில்தேவ், மீனாட்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் சத்யன் தலைமை ஏற்றார். பள்ளி நிர்வாக இயக்குனர் சங்கீதா, கல்வி சார் இயக்குனர் ராஜேஸ்வரி ஒருங்கிணைத்தனர். மத்திய தொழில் பாதுகாப்பு படை தலைமை தளபதி சங்கர் குமார் ஜா பேசினார். பள்ளி முதல்வர் சங்கர சுப்பிரமணியன் நன்றி கூறினார்.திருப்புத்துார்: பாபா அமிர்பாதுஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் பாபா அமிர்பாதுஷா தலைமை வகித்தார். ஐஸ்வர்ய வித்ய வித்யாலயம் பிரம்மகுமாரி வீரலெட்சுமி யோகப்பயிற்சி குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். தொடர்ந்து செயல்முறைகளை பயிற்சி அளித்தார். உடற்கல்வி ஆசிரியர் சிலம்பரசன் ஒருங்கிணைத்தார். தென்மாபட்டு இந்திராகாந்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் தலைவர் வக்கீல் கணேசன் முன்னிலை வகித்தார். தாளாளர் ஏகாம்பாள் கணேசன் தலைமை வகித்து யோகாவின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பயிற்சி பெற்ற மாணவ, மாணவியர் யோகாசனங்களின் செயல்விளக்கங்களை செய்தனர். முதல்வர் ராமு, துணை முதல்வர் பழனியப்பன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.திருப்புவனம்: திருப்புவனம் அரியவா மாண்டிசேரி நிறை நிலை பள்ளி மாணவ, மாணவியர் யோகா செய்தனர். மூத்த முதல்வர் கண்ணன் தலைமை வகித்தார், முதல்வர் தனபாலன் முன்னிலை வகித்தார், உதவி செயலாளர் அருணா வரவேற்றார். பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை துணை முதல்வர் முத்துராஜா உள்ளிட்ட ஆசிரியர்கள் செய்திருந்தனர். உடற்கல்வி ஆசிரியர் சின்ன ராஜா நன்றி கூறினார்சிங்கம்புணரி: சிங்கம்புணரி எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. தாளாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். முதல்வர் கௌரி சாலமன் வரவேற்றார். யோகா ஆசிரியர் ரேகா மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். தமிழாசிரியர் பாலமுருகன் பயிற்றுவித்தார்.ஆசிரியை சங்கீதா நன்றி கூறினார்.