உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாட்டின் வயிற்றில் 10 கிலோ பிளாஸ்டிக் கழிவு

மாட்டின் வயிற்றில் 10 கிலோ பிளாஸ்டிக் கழிவு

திருப்புவனம்: திருப்புவனத்தில் விபத்தில் உயிரிழந்த கோயில் மாட்டின் வயிற்றினுள் பத்து கிலோவிற்கு மேல் பிளாஸ்டிக் பை, சிமென்ட் சாக்கு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்புவனத்தில் 50க்கும் மேற்பட்ட கோயில் மாடுகள் கூட்டம் கூட்டமாக ரோட்டில் வலம் வருகின்றன.தினசரி மார்க்கெட், வாரச்சந்தை உள்ளிட்டவற்றில் மீதமாகும் காய்கறிகள், பழ கழிவுகளை உண்டு வாழும் இவை குப்பையில் கிடக்கும் கழிவுகளையும் சேர்த்து சாப்பிடுகின்றன. இதனால் இவற்றின் கழிவு துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேட்டையும் ஏற்படுத்தி வருகின்றன. கோயில் மாடுகள் உணவு கிடைக்காத காலங்களில் குப்பை மேடுகளில் கிடக்கும் பிளாஸ்டிக் பை, சிமென்ட் பைகளையும் உணவு என நினைத்து உண்டு வருகின்றன. இதனால் உடல் நலம் குன்றி கோயில் மாடுகள் உயிரிழக்கின்றன. திருப்புவனத்தில் இரு நாட்களுக்கு முன் சிவகங்கை ரோட்டில் அதிவேகமாக சென்ற வாகனம் மோதியதில் கோயில் மாடு உயிரிழந்தது. பரிசோதனையின் போது அதன் வயிற்றில் பத்து கிலோ அளவிற்கு பிளாஸ்டிக் பை, சிமென்ட் சாக்குகள் இருந்தது கண்டறியப்பட்டது விலங்கு நல ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ