கொங்கேஸ்வரர் கோயிலில் ஆக.8 ல் 1008 விளக்கு பூஜை
சிவகங்கை,: காளையார்கோவில் அருகே ஆ.சிரமம் கிராமத்தில் உள்ள கொங்கேஸ்வரர், ஏழுமுக காளியம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை ஆக., 8 ல் நடக்கிறது.இக்கோயிலில் 19 ம் ஆண்டு திருவிளக்கு பூஜை ஆக., 8 ம் தேதி நடைபெற உள்ளது.அன்று மாலையில் கொங்கேஸ்வரர், ஏழுமுக காளியம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடைபெற உள்ளது. அன்று மாலை 6:00மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும். இதில், ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று அம்மனுக்கு விளக்கு பூஜை நடத்துகின்றனர்.கோயில் அறங்காவலர் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி தாளாளர் குமரேசன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.