உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மக்கள் நீதிமன்றத்தில் 1563 வழக்குகளுக்கு தீர்வு

மக்கள் நீதிமன்றத்தில் 1563 வழக்குகளுக்கு தீர்வு

சிவகங்கை,:சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1563 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ. 9.88 கோடி வரை பயனாளி களுக்கு கிடைத்தது. சிவகங்கை மாவட்டத் தில் 14 மக்கள் நீதி மன்றங்கள் அமைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதி மன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்கு, சமரச குற்றவியல் வழக்கு, மோட்டார் வாகன விபத்து வழக்கு, வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி கோகுல் முருகன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் செந்தில்முரளி, ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி அனிதா கிருஸ்டி, சார்பு நீதிபதி பாண்டி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சார்பு நீதிபதி ராதிகா, மாவட்ட உரிமையியல் நீதிபதி தீபதர்ஷினி, குற்றவியல் நீதிதுறை நடுவர் எண் 1 நீதிபதி செல்வம், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 2 நீதிபதி தங்கமணி, வழக்கறிஞர்கள் சித்தீஸ்வரன், ஆண்டனி ஜெயராஜ், பாண்டிகண்ணன், கண்ணன்தீர்த்தம் ஆகியோர் வழக்குகளை விசாரித்த னர். 1613 குற்றவியல் வழக்கு களும், 196 காசோலை மோசடி வழக்குகளும், 256 வங்கிக் கடன் வழக்கு களும், 290 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 298 குடும்பப் பிரச்னை சம்பந்தப்பட்ட வழக்குகளும், 500 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும் என மொத்தம் 3153 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 1495 வழக்கு சமரசமாக தீர்க்கப்பட்டு 8 கோடியே 91 லட்சத்து 50 ஆயிரத்து 30 வரையில் வழக்காடி களுக்கு கிடைத்தது. வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளில் 603 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு 68 வழக்குக்கு தீர்வு காணப்பட்டு ரூ.97 லட்சத்து 33 ஆயிரத்து 200 வரையில் வங்கிகளுக்கு வரவானது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ