உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிடப்பில் 2 லட்சம் முதியோர் உதவித்தொகை விண்ணப்பம்

கிடப்பில் 2 லட்சம் முதியோர் உதவித்தொகை விண்ணப்பம்

சிவகங்கை:புதிதாக முதியோர் உதவித்தொகை கேட்டு 2023 செப்., முதல் வந்த 2 லட்சம் விண்ணப்பங்கள் கேட்பாரற்று கிடப்பதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் ஆதரவற்ற, விதவை என 65 வயதிற்கு மேற்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000, மாற்றுத்திறனாளி முதியோருக்கு ரூ.1500 வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் புதிதாக முதியோர் உதவித்தொகை கேட்போரின் விண்ணப்பத்தையும் அந்தந்த கலெக்டர் அலுவலகங்களில் பெற்று அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வருகின்றனர்.2023 செப்.,க்கு பின் விண்ணப்பித்த யாருக்கும் உதவித் தொகை வரவில்லை. மாவட்டந்தோறும் 4000 முதல் 5000 என தமிழகம் முழுதும் 2 லட்சம் விண்ணப்பங்கள் கேட்பாரற்று கிடக்கின்றன. உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவர்கள் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் பணம் இன்னும் வரவில்லை என தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.

விசாரணையால் தாமதம்

வருவாய்த்துறை அதிகாரி கூறியதாவது: அரசு மகளிர் உரிமைத்தொகை வழங்கி வருவதால், அந்த தொகையையும் பெற்று, முதியோர் உதவித்தொகைக்கும் விண்ணப்பித்து வருவதாக அரசுக்கு தகவல் சென்றுள்ளது. இது குறித்து விசாரித்து முதியோருக்கு தொகை விடுவிக்கப்படும். மாற்றுத்திறனாளி முதியோருக்கு தடையின்றி மாதம் ரூ.1500 பென்ஷன் வழங்கப்படுகிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ