உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  லாரி மீது பைக் மோதியதில் மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

 லாரி மீது பைக் மோதியதில் மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு

திருமயம்: டிப்பர் லாரி பின்னால், பைக் மோதியதில், கல்லுாரி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். சிவகங்கை மாவட்டம், கண்டனுார் புதுவயல் பகுதியை சேர்ந்தவர்கள் சாதிக் மகன் முகமது இப்ராஹிம், 18, மைதீன் மகன் முகமது, 18. இருவரும், திருமயம் அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு படிக்கின்றனர். இந்தாண்டின் கடைசி தேர்வை எழுதிவிட்டு, கல்லுாரியில் இருந்து இருவரும் நேற்று மதியம் வீட்டிற்கு, 'பல்சர்' பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, திருச்சி -- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, திருமயம் விலக்கு சாலையில் டிப்பர் லாரி திரும்புவதை அறியாமல், அதன் பின்னால் மோதியதாக கூறப்படுகிறது. இதில் பைக்கில் வந்த மாணவர்கள் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து, திருமயம் போலீசார் வழக்கு பதிந்து, டிப்பர் லாரி டிரைவர் பாண்டியன் என்பவரை விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ