20 கிலோ குட்கா சிக்கியது
மானாமதுரை: வாரணாசியில் இருந்து ராமநாதபுரம் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது. ராமேஸ்வரம் சிறப்பு குற்ற தடுப்பு பிரிவு சிறப்பு எஸ்.ஐ.,மயில்முருகன் மற்றும் போலீசார் ரயிலில் சோதனை செய்தபோது ஒரு பெட்டியில் 20 கிலோ குட்கா பொருட்கள் கிடந்ததை கைப்பற்றி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.