உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டு

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டு

சிவகங்கை:இளையான்குடியில், 13 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே பெத்தானேந்தலை சேர்ந்தவர் கார்த்திக், 25; கூலி வேலை செய்து வந்த இவர், ஒன்பதாம் வகுப்பு படித்த 13 வயது சிறுமியிடம் பழகினார்.திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, 2021 ஜூலை 21ல் பலாத்காரம் செய்தார். சிறுமி கர்ப்பிணியானார்.சிவகங்கை மகளிர் போலீசார் விசாரித்து, கார்த்திக்கை கைது செய்தனர். வழக்கை, சிவகங்கை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கோகுல்முருகன் விசாரித்தார்.கார்த்திக்கிற்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சிறுமிக்கு, 5 லட்சம் ரூபாய் அரசு இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை