உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கஞ்சா விற்பனை; 3 பேர் கைது

கஞ்சா விற்பனை; 3 பேர் கைது

சிவகங்கை; சிவகங்கை தாலுகா எஸ்.ஐ., சிவபிரகாஷ் போலீசாருடன் கீழக்கோவனுாரில் இருந்து மேலக்கோவானுார் செல்லும் ரோட்டில் குறிஞ்சி கண்மாய் கரையில் ரோந்து சென்றனர். அப்போது கோவானுார் அஜய் 21, பிரவீன்குமார் 20, பி.வேலாங்குளம் பிரபாகரன் 23 உள்ளிட்டோர் கண்மாய் கரையில் கஞ்சாவை பொட்டலம் போட்டு கொண்டிருந்தனர். போலீசாரைக் கண்டதும் அவர்கள் ஓடினர். அவர்களை போலீசார் பிடித்து கைது செய்து அவர்களிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் ஒரு வாளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை