உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காதலர் தின சலுகை எதிர்த்து போராட்டம்: 3 பேர் கைது

காதலர் தின சலுகை எதிர்த்து போராட்டம்: 3 பேர் கைது

காரைக்குடி : காரைக்குடியில் காதலர் தினத்தை முன்னிட்டு பேக்கரி சலுகை அறிவித்ததை கண்டித்து, ஹிந்து முன்னணியினர் தாலி கயிறுடன் போராட்டம் நடத்தியதாக 3 பேரை கைது செய்தனர். காதலர் தினத்தைமுன்னிட்டு காரைக்குடியில் உள்ள பேக்கரி ஒன்றில்சலுகை அறிவித்தனர். காதலர்களுக்கு ரோஜா பூ கொடுத்து பேக்கரியில் வரவேற்றனர். இதை கண்டித்து ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் அக்னிபாலா தலைமையில் நிர்வாகிகள் தாலி கயிறுடன் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த காரைக்குடி போலீசார் அக்னிபாலா உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை