வழிப்பறி வழக்கில் 3 பேர் கைது
தேவகோட்டை : தேவகோட்டையில்ஆட்டோ ஓட்டி வருபவர் சுரேஷ் 35., சில தினங்களுக்கு முன்பு வெங்களூர் கிராமத்தில் பயணிகளை இறக்கி விட்டு திரும்பினார். தாழையூர் அருகே வரும் போது ரோட்டில் மது அருந்திய மூன்று பேர் சுரேைஷ வழிமறித்து அவரை தாக்கி அவரிடமிருந்த அலைபேசியை பறித்துக் கொண்டனர். சுரேஷ் ஆறாவயல் போலீசில் புகார் செய்தார். வழிப்பறியில் ஈடுபட்ட தேவகோட்டை ஆவரங்காடு அர்ஜூன் 21., அகதிகள் முகாம் சந்தோஷ் 23., தாழையூர் சந்தோஷ் 24 மூவரையும் போலீசார் கைது செய்தனர்.