உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / துவார் மஞ்சுவிரட்டு காளைகள் முட்டியதில் 31 பேர் காயம் சிறுவனுக்கு குடல் சரிவு

துவார் மஞ்சுவிரட்டு காளைகள் முட்டியதில் 31 பேர் காயம் சிறுவனுக்கு குடல் சரிவு

நெற்குப்பை: திருப்புத்துார் அருகே துவாரில் நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 31பேர் காயமுற்றனர்.துவாரில் வள்ளிலிங்கம் கோயில் வைகாசி விழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில், சிறப்பு வழிபாடு நடத்தி, தொழுவில் இருந்த காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். 250க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. மாடுபிடி வீரர்கள் 80 பேர் பங்கேற்றனர். வயல்வெளிகளில் கட்டுமாடுகளை அவிழ்த்தனர். காளைகள் முட்டியதில் 31 பேர் காயமுற்றனர். அதில் பலத்த காயமுற்ற 8 பேரை பொன்னமராவதி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதில், காளை முட்டியதில் குடல்கள் சரிந்தநிலையில் அழகர்கோவிலை சேர்ந்த துரை மகன் அழகுஅம்பலம் 14, என்ற சிறுவனுக்கு மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ