ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு 3888 பேர் பங்கேற்பு
சிவகங்கை: ஆசிரியர் தேர்வு வாரியம் அக்.,12ல் நடத்த உள்ள தேர்வினை சிவகங்கை மாவட்டத்தில் 14 மையங்களில் 3888 பேர் எழுத உள்ளனர். மாநில அளவில் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, 1996 பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் அக்., 12 ல் நடத்துகிறது. சிவகங்கை, திருப்புத்துார், காரைக்குடி நகரங்களில் அமைத்துள்ள 14 தேர்வு மையங்களில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை தேர்வு நடக்கிறது. இத்தேர்வினை 3888 பேர் எழுதுகின்றனர். பாட வாரியாக 110 வினா, கல்வியியல் வினா 30, பொது அறிவு வினா 10 என 150 வினாக்களுக்கு கொள்குறி வகையில் விடை அளிக்க வேண்டும். ஒரு தேர்வு அறைக்கு ஒரு கண்காணிப்பாளர் வீதம் நியமிக்கப்படுவர். முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) மாரிமுத்து தலைமையில் பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுவினர் ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வினை நடத்துவர்.