மேலும் செய்திகள்
பிறந்த நாளில் வாலிபரை வெட்டிக்கொன்ற நண்பர்கள்
15-Jul-2025
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே வாலிபரை கொலை செய்து, புதைத்து விட்டு தப்பி சென்ற, நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். காரைக்குடி அருகே அமராவதிபுதுாரை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன் மகன் வெங்கடேஷ் 28, புஷ்பராஜ். வெங்கடேஷ், புஷ்பராஜ் நண்பர்களுடன் இணைந்து மது அருந்துவதும், தகராறில் ஈடுபடுவதும் வாடிக்கையாக இருந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு வெங்கடேஷ், புஷ்பராஜ் உட்பட அவர்களது நண்பர்கள் தேவகோட்டை அருகே தானாவயல் கண்மாயில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. வெங்கடேசை, அவர்களது நண்பர்கள் கத்தியால் அறுத்து கொலை செய்து, அவரது உடலை கண்மாயில் புதைத்து விட்டு தப்பி சென்றனர். புஷ்பராஜூம், கண்டனுாரை சேர்ந்த மனோஜூம் ஆறாவயல் போலீசில் சரண் அடைந்தனர். அவர்கள் புதைத்திருந்த உடல் டி.எஸ்.பி., கவுதம், தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து, புஷ்பராஜ், மனோஜ், விக்னேஷ், சீனிவாசன் ஆகியோரை கைது செய்தனர்.
15-Jul-2025