உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகை திருட்டு

காரைக்குடி; காரைக்குடியில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து 40 பவுன் நகை திருடியது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரம் வாடாமல்லி நகரை சேர்ந்தவர் பழனியப்பன் மனைவி வாணி ஸ்ரீ 41. பழனியப்பன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். வாணி ஸ்ரீ நேற்று முன்தினம் காலை மதுரை சென்றுவிட்டு இரவு 10:00 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காரைக்குடி போலீஸ் ஸ்டேஷனில் வாணி ஸ்ரீ புகார் அளித்தார். போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை