உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீட்டின் கேட் விழுந்து 6 வயது குழந்தை பலி

வீட்டின் கேட் விழுந்து 6 வயது குழந்தை பலி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள் அந்தோணிசாமி. இவர் குடும்பத்துடன் காளையார்கோவிலில் மறவமங்கலம் ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி ஜாக்குலின் அமலா ரூபன் 36. இவர்களுக்கு 6 வயது குழந்தை உள்ளது. குழந்தை காளையார்கோவில் கிழக்கு அரசு தொடக்க பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து ஜாக்குலின் அமலா ரூபன் குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வந்தார். வீட்டில் காம்பவுண்ட் சுவரில் உள்ள கேட்டை திறந்தார். இந்த கேட் கழன்று விழுந்ததில் குழந்தையின் தலை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது.ஜாக்குலினுக்கு இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் காளையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.குழந்தை மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார். ஜாக்குலின் அமலா ரூபன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !