உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 11 மாதத்தில் 93 பாலியல் வழக்குகள் பதிவு

11 மாதத்தில் 93 பாலியல் வழக்குகள் பதிவு

சிவகங்கை, : சிவகங்கை மாவட்டத்தில் 11 மாதத்தில் 93 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் போக்சோ பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.மாவட்டத்தில் பள்ளிகள், வீடுகள் உள்ளிட்ட இடங்களில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது குறித்து ஒவ்வொரு ஆண்டும் புகாரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதே தவிர குறையவில்லை. 2015ம் ஆண்டில் சிவகங்கை மாவட்டத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்பாக 28 வழக்கு போக்சோ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டன. 2016ல் 29, 2017ல் 27, 2018ல் 27, 2019ல் 25, 2020ல் 62, 2021ல் 89, 2022ல் 80, 2023ல் 75, இந்த ஆண்டு இதுவரை 93 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.2015 முதல் தற்போது வரை 400க்கும் மேற்பட்ட வழக்குகள் போக்சோ பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதலுக்காக பதிவானவையாகும்.மாவட்டத்தில் சப் டிவிஷன் அடிப்படையில் உள்ள 5 மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்யப்பட்டுள்ள போக்சோ வழக்குகளில் சிவகங்கை மகளிர் ஸ்டேசனிலேயே அதிகபட்சமாக இந்த வழக்குகள் பதிவாகின்றன.அடுத்தடுத்த எண்ணிக்கையில் மானாமதுரை, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்துார் ஸ்டேஷன்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மற்றும் அது தொடர்பான புகார்கள், வழக்குகள் கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வருகின்றன. போக்சோ பிரிவில் பதிவு செய்யப்படும் வழக்கில் நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கி வருகிறது. எனினும் பாலியல் தொந்தரவு வழக்குகள் குறையவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை