உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேதனை பராமரிப்பின்றி பாழான கால்நடை மருந்தகம் பல ஆண்டாகியும் அகற்றப்படாத மரம்

வேதனை பராமரிப்பின்றி பாழான கால்நடை மருந்தகம் பல ஆண்டாகியும் அகற்றப்படாத மரம்

காரைக்குடி:கண்டனுாரில் உள்ள கால்நடை மருந்தகம் பராமரிப்பின்றி பாழாகி வருவதோடு, மரம் சாய்ந்து விழுந்து பல ஆண்டுகளாகியும் அகற்றப்படாததால், புற்று வளர்ந்து மக்களுக்கும் கால்நடைகளுக்கும் அபாயம் நிலவி வருகிறது.காரைக்குடி கோட்டத்தில் காரைக்குடி, சூரக்குடி, கோட்டையூர், புதுவயல், கண்டனுார், அரியக்குடி, பீர்க்கலைக்காடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எருமைகள், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளாடுகள், 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள் உள்ளன.விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கும், வளர்ப்பு பிராணிகளுக்கும் சிகிச்சை அளிக்க அரசு கால்நடை மருத்துவமனையை நம்பி உள்ளனர். கண்டனுார் பேரூராட்சியில் உள்ள கால்நடை மருந்தகம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி பாழாகி வருகிறது.பத்து ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனை வளாகத்தில் சாய்ந்து கிடக்கும் மரங்கள் இதுவரை அகற்றப்படவில்லை. சாய்ந்து கிடக்கும் மரங்களில் புற்று வளர்ந்து நிற்பதால் பொதுமக்களுக்கும் கால்நடைகளுக்கும் அபாயம் நிலவுகிறது. தவிர மருத்துவமனை கட்டடம் முற்றிலும் சேதமடைந்து பராமரிப்பின்றி பாழாகி வருகிறது.விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை