உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நவீன சாகுபடி விவசாயிகளுக்கு பரிசு

நவீன சாகுபடி விவசாயிகளுக்கு பரிசு

சிவகங்கை: விவசாயத்தில் நவீன வேளாண் கருவிகள், சாகுபடி தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை கண்டறிந்து கடைபிடிப்பதில் சிறந்து விளங்கும் 3 விவசாயிகளுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும் என வேளாண் இணை இயக்குனர் எஸ்.சுந்தரமகாலிங்கம் தெரிவித்தார். அவர் கூறியதாவது: வேளாண் கருவிகள், நவீன சாகுபடி தொழில் நுட்பம் கண்டறிந்து, கடைபிடிப்பதில் சிறந்து விளங்கும் மூன்று விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், 2 ம் பரிசு ரூ.1.50 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும். இம்மாவட்டத்தில் விவசாயத்தில் புதிதாக நவீன கருவிகள் பயன்படுத்துதல், புதிய சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து உற்பத்தியை அதிகரிக்க செய்யும் விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற உள்ளனர். இதில் பயன்பெற வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் சென்று பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி