உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  புதிய கட்சி துவங்கும் தலைவருக்கே வரலாறு கிடையாது; : உதயநிதி காரைக்குடியில் விஜய் குறித்து சாடல்

 புதிய கட்சி துவங்கும் தலைவருக்கே வரலாறு கிடையாது; : உதயநிதி காரைக்குடியில் விஜய் குறித்து சாடல்

காரைக்குடி: ''புதிய கட்சி துவங்கும் தலைவருக்கே வரலாறு கிடையாது. ஆனால் தி.மு.க., தொண்டனுக்கே பெரிய வரலாறு உள்ளது,'' என, காரைக்குடியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் குறித்து துணை முதல்வர் உதயநிதி கடுமையாக சாடினார். காரைக்குடி எல்.சி.டி. பழனியப்பா கலையரங்கத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில் நடந்த விழாவில் பங்கேற்று துணை முதல்வர் பேசியதாவது: திராவிடம் என்னவென்று தெரியாத அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பா.ஜ., வுடன் சேர்ந்து திராவிட இயக்கத்தை அழிக்கிற வேலையில் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் தான் தி.மு.க., ஆளும் கட்சி. டில்லியில் முக்கியமான எதிர்க்கட்சி. தமிழகத்தில் அ.தி.மு.க., எதிர்க்கட்சி. டில்லியில் அடிமை கட்சி. சிறுபான்மையின மக்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் ஓட்டுகளை நீக்குவது எஸ்.ஐ.ஆரின் நோக்கம். அதற்கு இடம் அளிக்கக்கூடாது. 2026 சட்டசபை தேர்தலி-ல் தி.மு.க., வெற்றி பெற்று 7வது முறையாக ஆட்சி அமைக்கும். இன்று பலர் புதுசு புதுசாக கட்சி துவங்குகின்றனர். புதிய கட்சி துவங்கும் தலைவருக்கே வரலாறு கிடையாது. ஆனால், தி.மு.க., தொண்டனுக்கே பெரிய வரலாறு உள்ளது. இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை