ஆடிப்பூர உற்ஸவம்
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவ விழா நடந்தது. இதையொட்டி மாலை 6:00 மணிக்கு மீனாட்சி, செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடத்தப்பட்டது. அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயிலிலும் ஆடிப்பூர விழா கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.