உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை சிப்காட் பஸ் ஸ்டாப்பில் மின் விளக்கு இல்லாததால் விபத்து

மானாமதுரை சிப்காட் பஸ் ஸ்டாப்பில் மின் விளக்கு இல்லாததால் விபத்து

மானாமதுரை : மானாமதுரை சிப்காட் பஸ் ஸ்டாப் பகுதியில் உயர் மின் கோபுர விளக்கு இல்லாததால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.மானாமதுரை அருகே உள்ள சிப்காட் வளாகத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ள நிலையில் இப்பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்கள் சிப்காட் வழியாக அருகில் உள்ள கொன்னக்குளம், சூரக்குளம்,பறையன்குளம், மல்லல் சாத்தரசன்கோட்டை, மறவமங்கலம் உள்ளிட்ட கிராமங்களுக்கு வாகனங்களில் சென்று வருகின்றனர்.மானாமதுரையிலிருந்து சிவகங்கை செல்லும் ரோட்டில் சிப்காட் தொழிற்சாலை வளாகத்திற்கு திரும்பும் இடத்தில் உள்ள பஸ் ஸ்டாப்பில் ரோட்டின் இருபுறங்களிலும் மின்விளக்குகள் மற்றும் உயர் மின் கோபுர விளக்குகள் இல்லாததால் இரவில் இருட்டாக காணப்படுகிறது.இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தினமும் விபத்துக்களில் சிக்கி வருகின்றனர்.இப்பகுதியில் உடனடியாக மின்விளக்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை