மேலும் செய்திகள்
அ.தி.மு.க., பொதுக்கூட்டம்
23-Sep-2024
சிவகங்கை : சிவகங்கையில் புதிய உறுப்பினர் அட்டை வழங்கிய பணி குறித்தும், அ.தி.மு.க.,வின் வளர்ச்சி பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் சிவகங்கை, காளையார்கோவில், நாட்டரசன்கோட்டையில் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா ஆலோசனை வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ., நாகராஜன், உமாதேவன், ஒன்றிய செயலாளர் செல்வமணி, கருணாகரன், அருள் ஸ்டீபன், சிவாஜி, பழனிச்சாமி, நகர் செயலாளர் ராஜா, பேரூர் செயலாளர் கண்ணப்பன் முன்னிலை வகித்தனர். கல்லல் ஒன்றிய செயலாளர் சேவியர்தாஸ், இளையான்குடி ஒன்றிய செயலாளர் கோபி, ஜெ.பேரவை மாநில துணை செயலாளர் தமிழ்செல்வன், தகவல் தொழில் நுட்பபிரிவு மாவட்ட செயலாளர் குழந்தை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
23-Sep-2024