மேலும் செய்திகள்
பிரான்மலையில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
02-Apr-2025
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ஆண்டின் புதுமழை பெய்ததை தொடர்ந்து விவசாயிகள் 'பொன் ஏர்' இட்டு விவசாயபணிகளை துவக்கினர். தமிழகத்தில் தமிழ் வருடப் பிறப்பு தினமான சித்திரை 1ம் தேதி விவசாயிகள் வயல்களில் புதிய ஏர் ஓட்டி விவசாயப் பணிகளை துவக்குவது வழக்கம். சிங்கம்புணரி பகுதியில் தமிழ் வருட பிறப்புக்குப் பின்னர் முதல் மழை பெய்ததை தொடர்ந்து, அதற்கு பிறகு வரும் நல்ல நாளில் பொன் ஏர் பூட்டி விவசாயப் பணிகளை துவக்குவர். இந்தாண்டு தமிழ் வருடப் பிறப்பு தினத்தன்று புதுமழை பெய்தது. இதைத் தொடர்ந்து நேற்று சிங்கம்புணரி கிராமத்தினர் பொன் ஏர் இட முடிவு செய்தனர். சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் நிலத்தில் கோயில் மாடுகளை பூட்டி பொன் ஏர் இடும் விழா நடந்தது. கிராமத்தினர் சார்பில் ஏர் உழுது விவசாயப் பணிகளை துவக்கி வைத்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் அனைவரும் அவரவர் குலதெய்வ கோயில் வீடுகளில் ஒன்று கூடி அங்கிருந்து விவசாய நிலங்களுக்கு குடும்பத்துடன் சென்று குப்பை கொட்டி புதிய ஏர் பூட்டி விவசாய பணிகளை துவக்கினர்.
02-Apr-2025