உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க.,மாவட்ட ஜெ. பேரவை, இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி பிறந்த நாளை கொண்டாடுவது சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது.ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் ராமு.இளங்கோவன் தலைமை வகித்தார். நகர் செயலாளர் ராஜா வரவேற்றார். இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார். அமைப்பு செயலாளர்கள் ஏ.கே.சீனிவாசன், பாஸ்கரன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., பேசினர்.ஜெ. பேரவை மாநில துணை செயலாளர் தமிழ்செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கற்பகம், குனசேகரன், உமாதேவன், நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, கோபி, அருள்ஸ்டீபன், பழனிசாமி, சிவாஜி, சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் சிவதேவ்குமார், குழந்தை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை