உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அம்மாபட்டி பெயர் பலகை அவசியம்

அம்மாபட்டி பெயர் பலகை அவசியம்

திருப்புத்துார்: திருப்புத்தூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அம்மாபட்டி கிராம பெயர் பலகை வைக்க கிராமத்தினர் கோரியுள்ளனர்.திருமயம் -- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருப்புத்தூர் அருகே சிறுகூடல்பட்டிக்கு விலக்குரோடு பிரிகிறது. அதன் எதிரே அம்மாபட்டிக்கும் விலக்கு ரோடு பிரிகிறது. இந்த இரு ரோடுகள் பிரிவதற்கான குறியீடு அறிவிப்பு சந்திப்பிற்கு முன்னதாக வைக்கப்பட்டுள்ளது.ஆனால் ரோடு அருகில் சிறுகூடல்பட்டிக்கு மட்டும் பெயருடன் எச்சரிக்கை பலகை உள்ளது. அத்துடன் எதிர்புறம் அம்மாபட்டிக்கு பெயர், அம்புக்குறி விபரங்கள் அறிவிக்கப்படவில்லை. இதனால் வெளியூர் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி