| ADDED : டிச 03, 2025 06:21 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் கார்த்திகை அங்ககார பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் நேற்று மாலை 5:00 மணிக்கு மூலவருக்கும், நந்தீஸ்வரருக்கும் அபிஷேகம் நடந்தது. அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கும், நந்தீஸ்வரருக்கும் தீபாராதனை நடந்தது. வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய உற்ஸவர் கோயில் உட்பிரகார வலம் வந்தார். திருப்புத்துார் ஆதித்திருத்தளிநாதர் ஆலயத்திலும் நந்திக்கும் மூலவருக்கும் அபிேஷக, ஆராதனை நடந்து பிரதோஷ வழிபாடு நடந்தது. * மானாமதுரை, இளையான்குடி சிவன் கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. வெள்ளி உற்சவர் சோமநாதர் சுவாமி மற்றும் ஆனந்தவல்லி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயில் உள்வளாகத்தை வலம் வந்தனர். *இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் ,சாலைக்கிராமம் வரகுணேஸ்வரர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.