ஆனி திருவோண பூஜை
மானாமதுரை: மானாமதுரை அருகே வேம்பத்தூரில் உள்ள பூமி நீளா சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆனி மாத திருவோண பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.வேம்பத்தூரில் உள்ள பூமி நீளா சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆனி மாத திருவோண பூஜையை முன்னிட்டு அதிகாலை உற்ஸவர் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் பூமி நீளா சுந்தரராஜ பெருமாளுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், நெய், தயிர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து கோயில் முன் மண்டபத்தில் அர்ச்சகர்கள் ஹோமங்களை வளர்த்து அபிஷேக, ஆராதனைகள் மற்றும் பூஜைகளை செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருவோண பூஜையில் வேம்பத்தூர் கிராம மக்கள் பங்கேற்றனர்.