உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேக விழா

மானாமதுரை: மானாமதுரை அருகே மேலப்பிடாவூரில் முத்தையா அய்யனார் கோயில் வருடாபிஷேக விழா நடைபெற்றது. முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு அதிகாலை கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது. யாகசாலையில் புனித நீர் அடங்கிய கடங்களை வைத்து யாக சாலை பூஜைகள் செய்தனர். சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் திருமஞ்சனம் நடத்தி, புனித நீரால் அபிேஷகம் செய்தனர். கிராம மக்கள் ஏற்பாட்டை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி