உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆய்வு மையத்தில் பயிற்சி மாணவிக்கு பாராட்டு

ஆய்வு மையத்தில் பயிற்சி மாணவிக்கு பாராட்டு

தேவகோட்டை: தேவகோட்டையில் ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்திலும், இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்திலும் பயிற்சி பெற்ற பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தேவகோட்டை அருணகிரிபட்டினத்தைச் சேர்ந்தவர் மிர்து பாஷினி. இவர் தேவகோட்டை இன்பென்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இவர் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான வீட்டுக்கொரு விஞ்ஞானி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் உப்பு நீரிலிருந்து மாசு இல்லாத பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்து, அதனை எரித்து காண்பித்து அந்த கிரீன் ஹைட்ரஜனைக் கொண்டு ராக்கெட்டை செலுத்தி காண்பித்தார். இதற்காக இவருக்கு பதக்கமும், கோப்பையும் சான்றிதழும் பள்ளிக்கு கேடயமும் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். மேலும் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்திலும் பயிற்சி பெற்றார். இந்தியா சார்பாக ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டு பயிற்சி பெற்றார். தொடர்ந்து பெங்களூரு இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையத்தில் 10 நாட்கள் பயிற்சி பெற்றார். முதல்வர் ஸ்டெல்லா மேரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ