உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முதுமக்கள் தாழிகளை பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை

முதுமக்கள் தாழிகளை பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை

கீழடி : கீழடி அருகே கொந்தகை தளத்தில் முதுமக்கள் தாழிகளை பாதுகாக்க தொல்லியல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.கீழடியில் 2015ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் வைகை நதிக்கரை நாகரீகத்தை தேடி அகழாய்வு பணிகள் நடந்தன. அதன்பின் தமிழக தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணி தொடர்ந்து நடந்தன. கொந்தகை தளம் பண்டைய காலத்தில் ஈமகாடாக பயன்படுத்தி இருப்பது கண்டறியப்பட்டது. தமிழக அரசின் உத்தரவுப்படி அகழாய்வு தளங்கள் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. கீழடி, கொந்தகை தளங்கள் மாற்றப்பட்ட நிலையில் தினசரி ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். கொந்தகை தளம் கண்மாய், ஊரணிக்கு இடையே அமைந்துள்ளதாலும் 9ம் கட்ட அகழாய்வு நடந்த இடத்தின் அருகே நீர்வரத்து கால்வாய் அமைந்துள்ளதாலும் அகழாய்வு குழிகளில் நீர் ஊற்று காரணமாக தண்ணீர் ஊறி வருகிறது. முதுமக்கள் தாழிகளில் உள்ள பொருட்கள் வெளியே எடுக்கப்பட்டு மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் முதுமக்கள் தாழிகளை பாதுகாக்கும் பொருட்டு தொல்லியல் துறையும் பொதுப்பணித்துறையும் இணைந்து கொந்தகை தளத்தை சுற்றிலும் வாய்க்கால் சுவர் அமைத்து நீர் ஊற்று உள்ளே செல்வதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து வாய்க்கால்களும் அருகில் உள்ள சிறிய கிணற்றுடன் இணைக்கப்பட்டு ஊற்று தண்ணீர் அனைத்தும் கிணற்றினுள் செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ